ஐரோப்பிய நாடொன்றில் கணிசமாக குறைவடைந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை
2023ஆம் ஆண்டு, ஜேர்மனிக்கு ஏராளமானோர் புலம்பெயர்ந்ததாக ஜேர்மன் பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கிறது.
இதேவேளை, கடந்த ஆண்டைவிடவும் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு, சுமார் 663,000க்கும் அதிகமானோர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துள்ளநிலையில் அதே ஆண்டில் ஜேர்மனியை விட்டு அந்த ஆண்டில் வெளியேறியவர்களைவிட, ஜேர்மனிக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
28 சதவிகிதம் குறைவு
2022இல் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்கள் 1,462,000 பேர். அதாவது, 2022இல் புலம்பெயர்ந்தவர்களை விட 2023இல் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 45 சதவிகிதம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் புலம்பெயர்தல் விகிதம் 28 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், ஜேர்மனியிலிருந்து வெளியேறுவோர், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள் என பெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
