டிரம்ப்பிடம் திணறிய பைடன் : அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதத்தில் ஜோ பைடனின் தடுமாற்றம் அவரது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் நேற்று நடைபெற்றது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த விவாதத்தில் டிரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பைடனின் வயது ஏற்கெனவே தேர்தலில் பேசு பொருளான நிலையில் அவரது உடல் தளர்ச்சி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன.
இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 81) களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 78) களமிறங்கியுள்ளார்.
இறுதியில் இந்த விவாதத்தில் வெற்றி பெற்றவர் யார்? என அமெரிக்க வாக்காளர்கள் 565 பேரிடம் குறுஞ்செய்தி மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், 67 சதவிகிதம் பேர் விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம், 33 சதவிகிதம் பேர் மட்டுமே விவாதத்தில் பைடன் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
விவாதத்தின்போது டிரம்ப்பை எதிர்கொள்ள முடியாமல் ஜோ பைடன் தடுமாறியமை, அவரது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஜோ பைடனை விலக்கி வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOINNOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 37 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
