கட்டுநாயக்க விமான நிலைய ஊழியரின் நேர்மை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தவறவிடப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வைர மோதிரங்கள் உரிய பெண்ணிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இலங்கை கோடீஸ்வர வர்த்தகப் பெண் ஒருவர் மறந்து விட்டு சென்ற மோதிரமே அதன் உரிமையாளரிடம் வழங்க ஊழியர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பல கோடி ரூபா பெறுமதியான வைரங்கள் அடங்கிய இரண்டு மோதிரங்கள் காணாமல் போயுள்ளதாக குறித்த பெண் அறிவித்துள்ள நிலையில், அங்கு பணியாற்றிய இளைஞன் அதனை தேடி ஒப்படைத்துள்ளார்.
வைர மோதிரங்கள்
இந்த இரண்டு விலையுயர்ந்த மோதிரங்களும் உரிமையாளரால் மறந்துவிட்டு செல்லப்பட்டுள்ளது. பின்னர், அவர் தனது மோதிரங்கள் குறித்து விமான நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, அவர்கள் அவரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.
32 வயதான இந்த நேர்மையான விமான ஊழியரை பலரும் பராட்டுடியுள்ளனர். இந்த ஊழியரின் செயலை பாராட்டிய பெண் ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கியுள்ளார்.





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
