இன அழிப்பு குறித்து அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கூறிய கருத்துக்கு மன்னார் பிரஜைகள் ஆதரவு
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளமையை தான் வரவேற்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எங்களுடைய சகோதர குரு அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பொழுது, வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்று, தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என்று சொல்லி மிகவும் தெளிவாக தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு உண்மைகளை வெளிப்படுத்தி இருந்தார்.
அனுபவப் பகிர்வு
அவருடைய அனுபவப் பகிர்வு எல்லாராலும் வரவேற்று, அது உண்மை என்று அது சொல்லப் பட்டிருக்கின்ற வேளையிலே, மன்னார் மாவட்டத்தில் இருக்கும் மக்களாகிய நாங்கள் அவருடைய இந்தக் கருத்துக்களை மிகவும் மதிப்போடு ஏற்றுக் கொள்கிறோம்.

அதே வேளையில், கொழும்பு மறைமாவட்டத்தின் உடைய குருவாகப் பணியாற்றுகின்ற அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த அதற்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலான ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது கத்தோலிக்க சமூகத்திற்கும், இலங்கை வாழ் மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு கத்தோலிக்க குரு என்பவர் மற்றவர்களுக்காக தன் உயிரைக் கொடுப்பதற்காகத்தான் ஒரு குருவாக வருவது. அதனுடைய அந்தக் குருத்துவத்தின் உடைய மேன்மையை மறந்து, இவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்ற பொழுது, அது பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு, பயங்கரவாதிகளை கொன்றது தான் இந்தப் போரின் உடைய நோக்கமாக இருந்ததே ஒழிய, இன அழிப்பின் நோக்கமாக இருக்கவில்லை என்பதை மிகவும் தெளிவாக பொய்யை அவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam