தமிழர்கள் மீதான படுகொலைகளுக்கு 36 வருட நினைவேந்தல் அம்பாறையில் அனுஷ்டிப்பு
இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20ஆம் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தினத்தை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதி சந்தியில் நேற்று(21.06.2026) நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன், கல்முனை வாழ். மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் முதலில் விளக்கேற்றல் நடைபெற்றதுடன், தொடர்ந்து 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சம்பவ நாட்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் எதிர்கால சந்ததிகள் நலன் கருதி தத்தமது உரைகளில் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.
