பூமியில் வேற்றுக்கிரகவாசிகளின் பரிசோதனை..! அதிர்ச்சியூட்டும் சான்றுகள் - மர்ம பின்னணிகள்
அண்டவெளியில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான கோடிக்கணக்கான கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே நவீன விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றார்கள்.
அப்படியானால் அந்த உயிரினங்கள் வந்ததற்கான வருவதற்கான வர இருப்பதற்கான சான்றுகள் இருக்க வேண்டும்.
அவைகள் இருப்பது உண்மையானால் ஏன் இதுவரை அந்த உயிரினங்கள் மனிதர்களை தொடர்பு கொள்ளவில்லை. 1967ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் ஸ்னிப்பி என்ற 3 வயது குதிரை காணாமல் போனதாக தகவல் வெளியானது.
பல இடங்களில் தேடி கிடைக்காத குதிரை இறுதியில் சடலமாக கண்டெடுத்த போது அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அந்த குதிரையின் பல உறுப்புகள் அகற்றப்பட்டிருந்தநிலையில், அது மனிதர்களாலோ அல்லது காட்டு விலங்குகளாலோ தாக்கப்பட்டிருக்கவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த விடயங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்று பல ஆய்வுகள் நடத்திய பொது இந்த மாதிரியான சம்பவங்கள் பூமியின் பல இடங்களிலும் இடம்பெற்றுள்ளமை அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது.
இது வேற்றுகிரகவாசிகளின் செயற்பாபடாக இருக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்த விடயங்கள் தொடர்பிலும் வேற்றுக்கிரகவாசிகள் மேற்கொண்ட Genetic Harvest - Crop Circles போன்ற விடயங்களை தேடுகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...