விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் சுரேஷ் சலே! வலுக்கும் சந்தேகம்
சுரேஷ் சலே எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என்றால், இந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே அவர் செய்யக்கூடிய சிறந்த விடயமாகும் என்று சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் ஏனைய தரப்புக்களுடன் இணைந்து, விசாரணை செயன்முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதனால், இத்தாக்குதல்களுடன் அவருக்குத் தொடர்பு இருக்கக்கூடுமோ எனும் சந்தேகம் எழுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சத்தியாகிரக போராட்டம்
முன்னாள் தேசிய புலனாய்வு சேவை (SIS) தலைவர்சுரேஷ் சலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணை தொடர்பாக பெப்ரவரியில் குற்றப் புலனாய்வு துறையால் (CID) கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த அவர், உணவு உட்கொள்ளாது உண்ணாவிரதத்தை மேற்கொண்டமையால் உடல் நலம் சீரற்று தற்போது கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை விடுதலை செய்யுமாறு தற்போது அரசியல்வாதிகள் சிலரால் சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri