தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு கோரும் தமிழ் சிவில் சமூக அமையம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய அரசியல் அபிலாசைகளைக் கூட்டாகப் பிரகடனம் செய்ய, தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (P. Ariyanethran) வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அமையம் நேற்று (06) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரியுள்ளது.
இதற்கமைய, அந்த அறிக்கையில், "நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முதற்தடவையாக தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
தமிழ் பொது கட்டமைப்பு
இந்த அமைப்பின் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்காக சங்குச் சின்னத்தில் பா.அரியநேத்திரனை தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
காலங்காலமாகச் சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பை எதிர்கொண்டு போராடி வருகின்ற தமிழ்த் தேசம், தனது உயிரினும் மேலாகக் கருதி வரும் தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான ஒருவாய்ப்பாக வரவிருக்கின்ற தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.
இதற்காக, தேர்தலில் எம்மால் முன்மொழியப்பட்டுள்ள பா. அரியநேத்திரனுக்கு எமது வாக்குகளை வழங்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் பணிவன்புரிமையுடன் தமிழ் மக்களை கேட்டு கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri