ரணில் - சஜித்தின் அரசியல் தரகர் சுமந்திரன்: தமிழ்பொதுவேட்பாளர் சார்பில் எழுந்துள்ள கடும் விமர்சனம்
ஒரே நேரத்தில் இரு எதிரெதிராக போட்டியிடும் இரு வேட்பாளர்களை கையாளக் கூடிய ஒரு அரசியல் தரகராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் செயற்பட்டு வருகின்றார் என வடக்கு மாகாண சபை முன்னாள் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (07.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "சுமந்திரன் சஜித்தை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள போதிலும் இத்தீர்மானத்தின் நோக்கம் சஜித்தை வீழ்த்தி ரணிலை வெல்ல வைப்பது தான்.
இவ்வாறானதொரு விளையாட்டில் தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்காது தனது அரசியல் சித்துவிளையாட்டுக்களில் ஈடுபடக்கூடிய சுமந்திரன் போன்றோரை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும்.
மேலும், தங்களுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும். இதன் மூலமே ஒரு நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
