தேநீர் குடிக்க நான் வரவில்லை; எனது நியமனத்திற்கு இதுவே காரணம் - அங்கஜனுக்கு கீதநாத் பதிலடி

Jaffna People Development Angajanramanathan
By Rakesh Mar 05, 2022 08:58 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தவே யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் பிரதமரின் நேரடிப் பணிப்பின் பேரில் நான் நியமிக்கப்பட்டிருக்கின்றேனே தவிர தேநீரும், வடையும் சாப்பிட்டுச் செல்வதற்கல்ல என யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் பிரதமரின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள காசிலிங்கம் கீதநாத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார வரம் என்பது பிரதமரூடாக நேராக அணுக வேண்டிய பிரச்சினைகளுக்குத் துரிதமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகும். மாவட்டத்தின் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தும் முகமாகப் பிரதமரின் நேரடிப் பணிப்பின் கீழேயே இந்தப் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது.

இதன் பலாபலன்களை வெகுவிரைவில் அனைவரும் உணர்ந்துகொள்வார்கள். எமது பணி செயலில் காட்டுவதேயன்றி வாய்வீச்சில் காட்டுவதல்ல. பிரதமரின் பெயரையோ பிரதமர் அலுவலகத்தின் பெயரையோ ஒருபோதும் நான் துஷ்பிரயோகப்படுத்துவதில்லை.

பிரதமரின் தூரநோக்குத் திட்டங்களைச் செயலுருப்பெறச் செய்வதும் எமது அரசின் கொள்கைத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதுமே எமது தலையாய கடமையாகும். இதற்கு அரசியல் சாயம் பூச நினைப்பது அவரவரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியேயன்றி வேறெதுவும் இல்லை.

எனக்கு அரசியலுக்கு வரவேண்டிய எந்தவிதமான அவசியமுமோ - விருப்பமோ அறவே இல்லை. அப்படியே அரசியலுக்கு வந்தாலும் நான் 'தவளை அரசியல்' செய்யமாட்டேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எக்காரணங்களுக்காகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச என்னைப் பணி நீக்கவில்லை.

என்னுடைய பதிவுத்திருமணம், திருமணம் உட்பட அனைத்து சுப நிகழ்வுகளிலும் முதலில் வந்து தனது வாழ்த்துகளையும் ஆசியையும் வழங்குபவர் அமைச்சர் நாமல் ராஜபக்சதான். ஆகையினால் இதுவரை எமக்குள் எந்தவித கசப்புணர்வும் ஏற்பட்டதில்லை என்பதைப் பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்கிறேன்.

அர்த்தமற்ற, நகைப்புக்கிடமான குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் வழங்கும் அளவுக்கு எனக்கு நேரமில்லை. என் மீது குற்றஞ்சாட்டுபவர் பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் மாறிமாறி என்னைப் பற்றிப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார், வருகின்றார், வருவார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US