சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகும் கீதா கோபிநாத்!
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநர் பதவியிலிருந்து, பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் விலகவுள்ளார்.
இந்தியா வம்சாவளியான கீதா கோபிநாத் கடந்த 2018ம் ஆண்டு இந்த பதவியை பெற்றுக்கொண்டார். இவர் சர்வதேச நாணய நிதியத்தின் 11வது தலைமைப் பொருளியல் வல்லுநராக பொறுப்பேற்றிருந்தார்.
அத்துடன், கீதா கோபிநாத் இந்தப் பதவிக்கு வந்துள்ள முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பதவிக்கு வருவதற்க முன்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வு மற்றும் பொருளாதார பேராசிரியராக அவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கீதா கோபிநாத்துக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் வழங்கிய விடுமுறை முடிவடைய உள்ளதாகவும், இதனால் அவர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் கீதா கோபிநாத் எதிர்வரும் ஜனவரி மாதம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா கருத்து வெளியிடுகையில்,
“சர்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைவரான கீதா, பெருந்தொற்றின்போது விமர்சன பகுப்பாய்வை எழுதி வரலாறு படைத்தார்.
கோவிட் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் கையாண்டதில் அவருடைய கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் திட்டமிடல் மிகவும் பாராட்டுக்குரியது.
கோவிட் தொற்றை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய தடுப்பூசி இலக்குகளை நிர்ணயிப்பதில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது.
காலநிலை மாற்றம் குறித்த கொள்கைகளை பகுப்பாய்வு செய்ய சர்வதேச நிதியத்துக்குள் ஒரு காலநிலை மாற்றக் குழுவை அமைக்க அவர் உதவி செய்தார்” என்று தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri