உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன்
யாழ். (Jaffna) மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் அகில இலங்கை மட்டத்தில் 47ஆவது நிலையை பெற்று தென்மராட்சி மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் மாணவன் கருத்து தெரிவிக்கையில்,
"சிறு வயது முதல் எனக்கு கணித பாடத்தில் ஆர்வம் இருந்தது. அதனால் தான் கணித பிரிவை உயர்தர பிரிவிலும் நான் தெரிவு செய்தேன்.
சிறந்த பெறுபேறு
பாடசாலை சமூகம், தனியார் கல்வி சமூகம், எனது நண்பர்கள் போன்ற அனைவருக்கும் எனது வெற்றியில் பங்கு உண்டு. வகுப்பிலேயே 75 சதவீதமான பாடப்பரப்பை கவனித்து கிரகித்துக் கொள்வேன் வீட்டில் படிப்பது குறைவு.
மேலும், கல்வி பயின்று கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு நான் கூறுவது யாதெனில் நீங்கள் பல இடங்களுக்கு சென்று கல்வி பயில வேண்டிய தேவை இல்லை.
நீங்கள் எந்த இடத்தில் கல்வி பயின்றாலும் அதனை நான்கு கிரகித்து விளங்கி படித்தால் அது போதுமானது.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவு பொறியியலாளராக வருவதே எனது இலட்சியமாக உள்ளது. அதனை நான் நிச்சயமாக அடைவேன் உறுதி பூணுகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |