வவுனியா பாடசாலையின் 102 வருட கால வரலாற்றை மாற்றி அமைத்த மாணவிகள்
வவுனியா (Vavuniya) தெற்கு வலயத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயம்
ஆரம்பிக்கப்பட்டு 102 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியாகிய உயர்தரப்
பரீட்சைப் பெறுபேற்றில் முதன் முறையாக இரு மாணவிகள் கலைப்பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலையின் அதிபர் ஏ.கே. உபைத்தின் வழிகாட்டலில் இப் பாடசாலையில் குறித்த மாணவிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை பெற்றுள்ளனர்.
அந்தவகையில், நஹார் பாத்திமா சுஹா என்ற மாணவி கலைப்பிரிவில் 3ஏ சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 12 ஆவது இடத்தைபெற்று சாதனை படைத்துள்ளார்.
சிறந்த பெறுபேறு
மேலும், மனாஸ் பாத்திமா அப்னா என்ற மாணவி கலைப்பிரிவில் 3ஏ சித்தியைப் பெற்று மாவட்டத்தில் 31ஆவது நிலையைப் பெற்றுள்ளார்.
அதேவேளை, மாவட்ட மட்டத்தில், தாஜீதீன் மொஹமட் சபீக் ஏ,பி,சி பெறுபேற்றைப் பெற்று 94 ஆவது நிலையையும், முஸ்தபா பாத்திமா 2ஏ,சி பெறுபேற்றைப் பெற்று 103 ஆவது நிலையையும், நியாஸ் அஸ்னப் 2ஏ,பி பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் 122 ஆவது நிலையையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன், பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களில் சித்தி பெற்றுள்ளதுடன், பாடசலையின் 102 ஆண்டு வரலாற்றில் கலைப் பிரிவில் பெறப்பட்ட முதலாவது சிறந்த பெறுபேறு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |