சந்தேகத்தை தோற்றுவித்துள்ள பைடனின் கருத்து: ஜிஹாத் அமைப்பு எச்சரிக்கை
காசா தொடர்பிலான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின்(Joe Biden) போர் நிறுத்த முன்மொழிவானது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக ஜிஹாத் ஆயுதக் குழு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
போரை வலியுறுத்திய அமெரிக்கா தற்போது போர் நிறுத்தம் தொடர்பில் பேசுவதை நாங்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றோம் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
"அமெரிக்க நிர்வாகம் சியோனிச அமைப்பிற்கு முற்றிலும் பக்கச்சார்பானது. அதன் குற்றங்களை மூடிமறைப்பது மற்றும் ஆக்கிரமிப்பில் பங்கேற்பது என்பதை நிலைப்பாடாக கொண்டுள்ளது.
இனப்படுகொலைப் போர்
எங்கள் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாத்து, எதிர்ப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதத்தில் எந்தவொரு திட்டத்தையும் நாங்கள் மதிப்பீடு செய்வோம்.
நாங்கள் அமெரிக்க ஜனாதிபதியின் முன்மொழிவை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கும், காசா பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறுவதற்கும் ஒரு தேசிய நிலைப்பாட்டை மேற்கொள்வோம்.
ஒரு தெளிவான பரிமாற்ற ஒப்பந்தத்தில் எங்கள் மக்களுக்கு நிவாரணம் மற்றும் புனரமைப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் தேசிய நிலைப்பாட்டை நாங்கள் எடுப்போம்.” என கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |