நாட்டில் கனமழை பெய்யும் சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
அடுத்த 36 மணி நேரத்திற்கு நாட்டில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் இன்று (01) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அது சுட்டிக்காட்டியுள்ளது.
இடியுடன் கூடிய மழை
ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 19 மணி நேரம் முன்

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
