முல்லைத்தீவு - வேணாவில் பாடசாலை மாணவிகளின் சிறந்த பெறுபேறுகள்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை (G.C.E (A/L)) பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு (Mullaitivu) - வேணாவில் பாடசாலையிலுள்ள மூன்று மாணவிகள் 3ஏ (3A) தர சித்திகளை பெற்றுள்ளனர்.
கலைப் பிரிவில் தியாகராசா மோகனப்பிரியா என்ற மாணவி 3ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதேவேளை, தங்கவேல் கோபிதா என்ற மாணவி 3ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்தங்கிய கிராமம்
மேலும், முத்துக்குமார் டிலைக்சனா 3ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 14 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, வணிகப்பிரிவில் பொன்னுத்துரை கம்ஷனா என்ற மாணவி ஏ, 2பி (A, 2B) பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தில் 20 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், வறுமைக் கோட்டுக்குட்ப்பட்ட மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்ற ஒரு கிராமமான வேணாவில் கிராமத்தில் குறித்த மாணவிகள் விடாமுயற்சியுடன் கல்வி கற்று சித்தி பெற்றுள்ளமையால் கிராம அமைப்புக்கள் பொதுமக்கள் என பலரும் அவர்களை வாழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 11 மணி நேரம் முன்
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
புடின் பயன்படுத்திய ரகசிய ஏவுகணை... 160 ரஷ்ய எண்ணெய், எரிசக்தி வசதிகளைத் தாக்கிய உக்ரைன் News Lankasri