நாட்டில் இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி
ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர், உயிரிழந்துள்ளனர்.
புளத்சிங்கள - மானான பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிய பெண் ஒருவரும், ஹேகொட, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவருமே நேற்றைய விபத்துக்களில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
புளத்சிங்கள வீதியின் பெல்லபிடிய சந்திக்கு அருகில், ஹொரணை பகுதியில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், குறித்த பேருந்தின் இருந்து இறங்கிய பெண் பேருந்துக்கு முன் பக்கமாக வீதியை கடக்க முற்பட்ட போது அதே பேருந்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
மேலும், தொடங்கொட, தெலிகட பிரதேசத்தில் இராணுவத்திற்கு சொந்தமாக கனரக வாகனம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
