இந்தியாவில் கடும் வெப்பத்தினால் 24 மணி நேரத்திற்குள் 85 உயிரிழப்புக்கள்
இந்தியாவில் (India) நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் ஒடிசா (Odisha), பீகார் (Bihar), ஜார்க்கண்ட் (Jharkhand), இராஜஸ்தான் (Rajasthan) மற்றும் உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh) ஆகிய மாநிலங்களிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பநிலை
மேலும், பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன் தொடர்ந்தும் இந்நிலை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடும் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி வருவதுடன் அப்பகுதி மக்கள் அதிக பாதிப்பினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam