க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பரீட்சை, நாடு முழுவதும் உள்ள 1228 பரீட்சை நிலையங்களில் 171,100 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். .
அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத
எழுத்துத் பரீட்சை மற்றும் செய்முறைப் பரீட்சை இரண்டிலும் மதிப்பெண்கள் பாடங்களின் இறுதி முடிவைத் தீர்மானிக்க பயன்படுத்தப்படும் என்பதால், இரண்டிற்கும் தோற்றுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் கால அட்டவணைகள் அந்தந்த பாடசாலையின் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத பாடசாலை பரீட்சார்த்திகள் தமது பாடசாலை எண், பாடசாலையின் பெயர், முகவரி மற்றும் உரிய விவரங்களுடனும் தனியார் பரீட்சார்த்திகள் தங்களின் பெயர் மற்றும் முகவரி, தேர்வு எண், அழகியல் பாடம் பெயர், முகவரி, பரீட்சைச் சுட்டெண், அழகியல் பாடம் முதலிய விவரங்களுடனும் பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளைக்கு கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி எண்களுடாக அறியத்தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின் வலைத்தளத்திற்கு (www.doenets.lk) சென்று தங்கள் பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் தங்கள் அனுமதி அட்டைகளை மே 19 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு,
தொலைபேசி: 011-2784537 / 011-2786616 / 011-2784208 / 011-2786200 / 011-2784201
நேரடி தொலைபேசி இலக்கம் : 1911
மின்னஞ்சல்: gceolexams@gmail.com
தொலைநகல்: 011-2784422
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
