க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் குறித்து வெளியான அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தடை
அந்த வகையில், பாடங்களுடன் தொடர்புடைய விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளையும் குறித்த காலப்பகுதியில் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,519 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.