அதிகஸ்ட பிரதேச பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி
2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியிருந்தன.
இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களது விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
சிறந்த பெறுபேறுகள்
இந்த நிலையில், அதிகஸ்ட பாடசாலையான வவுனியா - சின்னடம்பன் வித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் மிகச் சிறந்த பெறுபேறு இம்முறை கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி, செந்தில்குமரன் தமிழருவி என்ற மாணவி 7A, B, C என்ற பெறுபேற்றைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை, குறித்த பாடசாலையின் ஏனைய பெறுபேறுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனடிப்படையில், மாணவி நவரத்தினம் அகலியா - 3A, 3B, 2C, S
மாணவன் விவேகானந்தராசா பாவரசன் - A, 3B, 3C, 2S
மாணவன் சிவகுமார் சாருஜன் - A, 3B, 4C, S
மாணவி வசந்தகுமார் கிந்துஷா - B, 4C, 4S
மாணவி திருச்செல்வம் நிலாயினி - 3B, 2C, 3S
மாணவி அன்ரன் செல்வகுமார் சன்சிகா - 2B, 3C, 3S ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |