சாதாரண தர பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன் சாதனை!
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக நேற்று நள்ளிரவு வெளியாகி இருந்தன.
அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனான கேதீஸ்வரன் கேசவன் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை
சைவநெறி - A, தமிழ் - A, கணிதம் - A, விஞ்ஞானம் - A, ஆங்கிலம் - A, வரலாறு - A, தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் - A, தமிழ் இலக்கியநயம் - A, வணிகக்கல்வியும் கணக்கீடும் - A ஆகிய 9 பாடங்களிலும் A பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் ஆறாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதில் மொத்தம் 452,979 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri