பரீட்சை அனுமதி அட்டையை மறந்து பரீட்சைக்கு சென்ற மாணவி! பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமான செயலால் குவியும் பாராட்டு
பாணந்துறை - கோனாபொல பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவருக்கு பரீட்சை அனுமதி அட்டையை எடுத்து வர உதவிய பொலிஸ் உத்தியோகத்தரை பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜன்ட் குலரத்ன மற்றும் மொரகஹஹேன பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி, பொலிஸ் பரிசோதகர் துசித விக்கிரமரத்ன ஆகியோர் பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகேவிடம் அழைக்கப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.
மொரகஹஹேன கோனாபொல மகா வித்தியாலய பரீட்சை நிலையத்திற்கு முன்பாக மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்து பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஏ.குலரத்ன கடமையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது மாணவியொருவர் திடீரென அதிகாரியிடம் அழுதுக்கொண்டே சென்று, தான் கணிதப்பாடத்திற்கு இரண்டாவது முறையாக விண்ணப்பித்ததாகவும், பரீட்சை அனுமதி அட்டையை எடுத்து வர மறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
கடமைக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானம்
இதன்போது கைக்கடிகாரத்தைப் பார்த்த அதிகாரி, பரீட்சை ஆரம்பிக்க 22 நிமிடங்கள் உள்ளதினை அவதானித்து பொலிஸ் நிலைய தளபதிக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்து அவரது அனுமதியுடன் தனது கடமை நேர மோட்டார் சைக்கிளில் சிறுமியை ஏற்றிக்கொண்டு சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்போது சிறுமியின் வீட்டில் அனுமதி அட்டை இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, மாணவியை மீண்டும் பரீட்சை மையத்திற்கு அழைத்துச் சென்றதுடன், பரீட்சை ஆரம்பிப்பதற்குள் மாணவியை மீண்டும் பரீட்சை மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தி மாணவி பரீட்சையை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் பாடசாலையின் அதிபரின் தலையீட்டின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடமைக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தை கடைபிடிக்கும் இது போன்ற பொலிஸ் அதிகாரிகள் சமுதாயத்திற்கு சிறந்த உதாரணமாக பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
