வணிக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறும் விற்பனையாளர்கள் மீது தண்ணீர் குளிர்விக்கப்பட்டதா அல்லது வேறு வர்த்தக நாமத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டதை என்பதை பொருட்படுத்தாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்தா சமரக்கோன் தெரிவித்தள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை
சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வணிகங்களுக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிகமாக போத்தல் குடிநீரை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறும் செயல் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதற்கு இணங்காத எந்தவொரு விற்பனையாளர்களுக்கும் எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




