ரணிலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழை வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டு செப்டம்பரில், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால், வழங்கப்பட்ட அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ரணில் விக்ரமசிங்க அரச நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தவில்லை என்றும் முன்னரை போன்றே குற்றச்சாட்டுகளை மீண்டும் மறுத்துள்ளது.
மதிய உணவு விருந்து
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டெரி கையொப்பமிட்ட அழைப்பிதழ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணிக்கு அனுப்பப்பட்டது.
அதற்கமைய, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி அன்று வால்வர்ஹாம்டனில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவுடன் இடம்பெற்ற மதிய உணவு விருந்தில் அவர்கள் பங்கேற்றது குறித்தும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
