ஈஸ்டர் தாக்குதலின் உண்மை முகத்தை மூடி மறைக்கும் இலங்கை! முக்கிய சாட்சியத்தின் திடுக்கிடும் தகவல்
ஈஸ்டர் தாக்குதலின் முடிச்சுக்கள் இன்றுவரை அவிழ்க்கப்படாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்திய நிலைபாடு சர்வதேசத்தின் கவனத்தை இலங்கை பக்கம் திருப்பியுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கைக்கு சக்தி இல்லை என மைத்திரி அடித்துக்கூறும் இந்த நிலைப்பாடு, சர்வதேசத்தின் முக்கிய நாடையோ நபரையோ கொண்டமைந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
இவ்வளவு காலமும் இந்த விசாரணைகள் பிள்ளையான், மௌலானா, சஹ்ரான் மற்றும் சுரேஸ் சலே போன்ற பெயர்களுடன் மடடுப்படுத்தப்பட்டது.
ஆனால் மைத்திரி தற்போது வெளிப்படுத்திய விடயத்தின் பின்னணி பிரதான சூத்திரதாரிகள் என அடையாளமிடப்பட்டவர்கள் இவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
ஒருவேளை மைத்திரி தற்போது இடம்பெறும் விசாரணைகளை திசைதிருப்ப குறித்த விடயத்தை கூறியிருக்கலாம்.
ஆனால், அவர் கூறியது உண்மையெனின் யாருடைய ஆதரவில் யாருக்காக செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் தற்போதைய அரசாங்கத்துக்கு உருவாகியுள்ளது.
இந்த பின்னணியில் மைத்திரியின் கூற்று யாரை மையப்படுத்துகிறது? அது சூத்திரதாரிகளை தாண்டி எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




