ரணிலின் கைதினையடுத்து பரபரப்பாகும் நீதிமன்ற வளாகத்தில் திடீர் மின்தடை
புதிய இணைப்பு
கோட்டை நீதிமன்றில் தடைப்பட்ட மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணிலின் வழக்கு மீண்டும் தொடங்கவுள்ளது.

ஆறாம் இணைப்பு
கோட்டை நீதவான் நீதிமன்று பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணையில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் மின்சாரசபை ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளனர்.




ஐந்தாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது நீதிமன்றில் வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணிலின் பிணை மனு மீதான விசாரணை அரை மணி நேரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது .
ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. முன்னதாக பிணை வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அது தொடர்பான நீதிமன்ற இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை என கூறப்படுகின்றது.
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்கும் தீர்மானத்தில் கருத்துமுரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
நான்காம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மூன்றாம் இணைப்பு
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(22) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தார்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam