சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்.
அதன்படி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் வெளியாகும் திகதி
பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெறுபேறுகள் வெளியாகும் குறிப்பிட்ட திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்ற நிலையில், இதில் 4,51,463 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam