க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் (Photos)
உயர்தர மாணவர்களுக்கான 2021ஆம் ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகளில் கிழக்கு மாகாணம் முதல்நிலை பெற்றுள்ளதுடன், வடக்கு மாகாணம் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளது.
கல்வி அமைச்சு
பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறத்தக்க வகையில் மாணவர்கள் சித்தியடைந்த வீதத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாணத்தில் 66 வீத மாணவர்கள் சித்தி பெற்று முதலாம் இடத்தினையும், ஊவா மாகாணத்தில் 65.86 வீதமான மாணவர்கள் சித்தி பெற்று இரண்டாம் இடத்தினையும், வடமாகாணத்தில் 65.26 வீதமான மாணவர்கள் சித்தி பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன.
பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்ற வீதம்
மேலும் வடமேல் மாகாணம் 64.07 வீதம், மத்திய மாகாணம் 63.84 வீதம், மேல் மாகாணம் 63.31 வீதம், சப்பிரகமுவ மாகாணம் 62.84 வீதம், தென்மாகாணம் 62.11 வீதம், வட மத்திய மாகாணம் 60.10 வீதத்தையும் முறையே பெற்றுள்ளன.
கோவிட் அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பன காரணமாக பாடசாலைகளுக்கு அடிக்கடி விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணம் கல்வியில் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடி
இதற்கமைய க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்/மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி சாதனை படைத்துள்ளது.
அந்த வகையில் பொறியல் தொழிநுட்ப பிரிவில் எஸ்.ஐ.எம்.ஹம்சாத் எனும் மாணவன் 2 ஏ பி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
உயிரியல் தொழில்நுட்பவியல் பிரிவில் எம்.என்.எப் மில்பரா 2 ஏ பி சித்தியோடு மாவட்ட மட்டத்தில் 4ஆம் இடத்தையும், ஜே.ஏ.பி. சாரனா 2 ஏ பி சித்தியோடு மாவட்ட மட்டத்தில் 05ஆம் இடத்தையும் பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் ஏ.ஹம்சத் சஹி எனும் மாணவி மாவட்ட மட்டத்தில் 5ஆம் இடத்தைப் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளார்.
பாடசாலை பெறுபேற்றின் அடிப்படையின் மருத்துவத்துறைக்கு 04 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 03 மாணவர்களும், பொறியியல் தொழிநுட்ப பிரிவில் 06 மாணவர்களும், உயிர் முறைமை தொழிநுட்ப பிரிவில் 07 மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் கலைத்துறையில் 03 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதோடு, வர்த்தக துறைக்கு 01 மாணவரும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளார்.
இந்த முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 57 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதோடு, 131 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பிக்க தகை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








