பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டை அத்தியாவசிய சேவையாக்க கட்சிகள் இணக்கம்
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க கட்சிகள் இணங்கியுள்ளன.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க கட்சித் தலைவர்கள் இணங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய சேவை குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை குறித்தும் பேசப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை விடைததாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கட்சித் தலைவர்கள் இணங்கியதாகவும் தேவை ஏற்பட்டால் அந்தப் பணியை அத்தியாவசிய சேவையாக அறிவித்து மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை பணயக் கைதிகளை வைத்து தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க சிலர் முயற்சிப்பதாக இந்தக் கூட்டத்தில் விமர்சனங்கள் எழுந்ததாகத் தெரிவித்துள்ளார்.