11 இஸ்லாமிய அடைப்படவாத அமைப்புகள் மீதான தடை - வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இதற்கான அனுமதியினை சட்டமா அதிபர் வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் ஐக்கிய தௌகீத் ஜமாஅத், சிலோன் தௌகீத் ஜமாஅத், இலங்கை தௌகித் ஜமாஅத், அகில இலங்கை தௌகீத் ஜமாஅத், ஜம்மியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா, தாருல் ஆதார்:ஜமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஐ.எஸ்.எம்), இஸ்லாமிய அரசு ஈராக் சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்), அல்கொய்தா, சேவ் த பேர்ள்ஸ், சூப்பர் முஸ்லிம் ஆகிய அமைப்புகளே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாட்டுக்குள் இயங்கி வரும் அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்வதன் அவசியம் தொடர்பில் சுட்டிக்காட்டிய நிலையில், அவ்வாறான பல அமைப்புகளை தடை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
