22ஆவது திருத்த சட்டம்: வர்த்தமானி வெளியீடு
அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டத்திற்கான உத்தேச வரைவு வர்த்தமானி ஊடாக இன்று(03) வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து அதனை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தார்.
வர்த்தமானி வெளியீடு
அதன் பிரகாரம் உருவாக்கப்பட்ட 22 வது அரசியலமைப்பு திருத்த வரைபுக்கான அமைச்சரவை அங்கீகாரம் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.
அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவான முறையில் தற்போது உத்தேச வரைபு வர்த்தமானி அறிவித்தலாக வௌியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இந்த வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டுள்ளார்.
உத்தேச 22ம் திருத்தச் சட்டம்: அமைச்சரவையில் சமர்ப்பிப்பு |

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
