வடிகால் அமைப்புக்குரிய கட்டணங்கள் அதிகரிப்பு: வர்த்தமானி வெளியீடு
வடிகால் அமைப்புக்குரிய கட்டண அதிகரிப்பு குறித்து புதிய வர்த்தமானியொன்று வெளியாகியுள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வடிகால் அமைப்புக்குரிய கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நீர்க்கட்டண அதிகரிப்பு
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
அதற்கமைய, வீடுகளின் நீர் கட்டணம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகள் மற்றும் அரச பாடசாலைகளில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
