நீர்க்கட்டண அதிகரிப்பு! இன்று வர்த்தமானி வெளியாகும்
நீர் கட்டண அதிகரிப்பு குறித்து புதிய அறிவித்தல் வெளியானது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி வெளியானது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாய்ப்பு

எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
அதற்கமைய, வீடுகளின் நீர் கட்டணம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகள் மற்றும் அரச பாடசாலைகளில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது அவர் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri