உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்
பல சேவைகளை அத்தியாவசியமானவையாக அறிவிக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கையெழுத்திட்டுள்ளார்.
பயணிகளுக்கும்,பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானியிலே ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகள்

இதற்கமைய சுங்கச் சட்டத்தின் (அத்தியாயம் 235) நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்டுள்ளது,ஏதேனும் துறைமுகத்தினுள் இருக்கும் களத்திலிருந்து,உணவு பொருள் அல்லது பானம், நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் போன்ற பொருட்களை வெளியேற்றல்,கொண்டுசெல்லல்,களஞ்சியப்படுத்தல்,அகற்றுதல் என்பதற்காக சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் புகையிரத பாதைகள் உட்பட, வான் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri