ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு
ரக்னா பாதுகாப்பு லங்கா லிமிடெட் (RALL) மற்றும் இரண்டு நிறுவனங்களை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அண்மையில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.
அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நிறுவனங்கள்
இந்நிலையில், ரக்னா பாதுகாப்பு லங்கா லிமிடெட் (RALL) உள்ளிட்ட முக்கிய மூன்று நிறுவனங்கள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
Selendiva Investments Limited மற்றும் Hotel Developers (Lanka) Pvt Limited ஆகிய இரண்டும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு நிறுவனங்களாகும்.
முன்னதாக, ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது. Selendiva Investments Ltd மற்றும் Hotel Developers (Lanka) Pvt Ltd ஆகிவை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.