12ம் திகதிக்கு பின்னர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் - பிரபல ஜோதிடர் கணிப்பு
எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் என பிரபல ஜோதிடர் ஜோதிர்வேதி கே.ஏ.யு. சரச்சந்திர தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை ஜூலை 09ஆம் திகதி மற்றும் அன்றைய தினத்துடன் தொடர்புடைய சில நாட்களில் மிகவும் தீவிரமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜுலை 9ம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும், ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதவி விலகிய மகிந்த
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய உள்ளட்ட முக்கியஸ்தர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்ள கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவைகளுக்க கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியிருந்தார். அதனை தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பதவி விலகினர்.
எனினும், இலங்கையின் நிலை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுள்ளது. நாளையும், நாளை மறு தினமும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே எதிர்வரும் 12ம் திகதியின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் என பிரபல ஜோதிடர் ஜோதிர்வேதி கே.ஏ.யு. சரச்சந்திர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.