புதிய நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக லக்ஷ்மன் நிபுன ஆராச்சியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார இன்று பதவியேற்றவுடன் நாடாளுமன்ற தேர்தல் உடனடி தேவை என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் அதற்கான காலத்தை அவர் குறிப்பிடவில்லை.
புதிய நியமனங்கள்
இதற்கமைய புதிய ஜனாதிபதி தமது திட்டங்களை முன்னெடுக்க வசதியான அமைச்சரவை அமைக்கப்படுவது அவசியமானதாகும்.
இந்நிலையில் தற்காலிக அமைச்சரவை ஒன்று அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நாட்டில் இன்று பலர் தமது பதவி விலகலை அறிவித்துள்ள நிலையில், புதிய நியமனங்களும் வழங்கப்பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
