காசாவின் தீவிர நிலை: பட்டினியால் இறக்கும் அபாயத்தில் குழந்தைகள்
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையில் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் பயங்கரமான சூழலை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில் இருப்பதாக
உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தரப்பு காசாவில் உள்ள “அல்-அவ்தா” மற்றும் “கமல் அத்வான்” ஆகிய மருத்துவமனைகளை பார்வையிட்டுள்ள நிலையில், குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும், அல் அவ்தா மருத்துவமனையின் ஒருபகுதி மொத்தமாக சேதமடைந்துள்ளதால், அங்குள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் மரணம்
அதுமட்டுமின்றி, வடக்கு காசாவில் உள்ள ஒரே குழந்தைகள் மருத்துவமனையான கமல் அத்வான் மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளனர்.
உணவு இல்லாத சூழலில் இதுவரை 10 சிறார்கள் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஊட்டச்சத்து குறைபாடுகளால் 16 சிறார்கள் இதுவரை மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை 30,500 பாலஸ்தீன மக்கள் போரின் உக்கிரம் காரணமாக காசா பகுதியில் பஞ்சம் தவிர்க்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
உலக சுகாதார அமைப்பு
மேலும், ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் அளித்துவரும் பதிலடியால் இதுவரை 30,500 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, குறித்த மருத்துவமனைகளுக்கு 9,500 லிற்றர் எரிபொருள் உலக சுகாதார அமைப்பு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய மருந்துகளும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |