யாரும் எடுக்காத முடிவுகளை எடுத்துள்ள கோட்டாபய - மகிந்த அரசாங்கம்: பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்
தனது துறைப் பற்றிய அறிவு கொஞ்சம் கூட இல்லாத ஒருவர் நாட்டின் தலைவராக பதவிக்கு வந்தால், நாடு அராஜக நிலைமைக்கு செல்லும் எனவும் இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் எடுக்காத பல முடிவுகளை தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிக்க(Gayantha Karunathilaka) கூறியுள்ளார்.
பலப்பிட்டிய அஹூன்கல்ல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை நிர்வகிப்பது உட்பட துறை சம்பந்தமான எந்த அறிவும் நாட்டின் தற்போதைய தலைவருக்கு கிடையாது. இதன் காரணமாகவே உரத்தட்டுப்பாடு உட்பட ஏனைய பிரசசினை ஏற்பட்டு, நாடு நாளுக்கு நாள் அராஜக நிலைமைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றது.
இதுவரை ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எடுக்காது முடிவுகளையும் தீர்மானங்களையும் தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளது. கறுவா என்பது டொலர் காய்க்கும் மரம். அந்த டொலர் காய்க்கும் மரங்கள் அழிந்து போக இடமளித்து விட்டு அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது.
இல்லை என்றால், கறுவா பயிர் செய்யும் உழவர்களுக்கு தேவையான உரத்தை வழங்காமல் இருக்குமா? இப்படி சென்றால், எமது நாட்டுக்கு வரும் டொலர்கள் இல்லாமல் போய்விடும் என்பதுடன் நாடும் இல்லாமல் போய்விடும் எனவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam