பிரித்தானியாவின் முன்னணி விமான நிலையம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கோடை காலத்தில் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க கேட்விக் விமான நிலையம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தினசரி விமானங்களின் எண்ணிக்கை ஜூலையில் 825 ஆகவும் ஒகஸ்டில் 850 ஆகவும் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைய நாட்களாக பிரித்தானிய விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்படுவது மற்றும் விமானங்கள் தாமதமாவது ஆகிய காரணங்களால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பயணிகள் "மிகவும் நம்பகமான மற்றும் சிறந்த தரமான சேவையை அனுபவிக்க" உதவுவதற்காக, அதன் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கேட்விக் விமான நிலையம் அறிவித்துள்ளது.
400 புதிய ஊழியர்கள் நியமனம்
இந்த கோடையில் பாதுகாப்பு சோதனைகள் மூலம் பயணிகளுக்கு உதவ 400 புதிய ஊழியர்களை நியமித்துள்ளதாகவும், புதிய பணியாளர்கள் விரைவில் பணிகளை தொடங்குவார்கள் என்றும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், விமான நிலையத்தில் பல நிறுவனங்களில் மேலும் கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக விமான நிலையத்தின் மதிப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய சிக்கல் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் பயணிகள் வரிசையில் காத்திருப்பது, தாமதங்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்படுவது போன்ற சிரமங்களை எதிர்நோக்க வேண்டிவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமானங்களை ரத்து செய்யும் விமான நிறுவனங்கள்
பிரித்தானிய மகாராணியின் ஜூபிலி வாரத்தில், விமான நிலையத்தில் செயல்படும் பல நிறுவனங்கள் பணியாளர்கள் பற்றாக்குறையால் போராடியது தெளிவாகிறது என்று கேட்விக்கின் தலைமை நிர்வாகி ஸ்டீவர்ட் விங்கேட் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த முடிவு விமான நிறுவனங்களும் பயணிகளும் முன்கூட்டியே திட்டமிடவும் கடைசி நிமிட விமான ரத்துகளைத் தவிர்க்கவும் அனுமதிக்கும் என்று விங்கேட் தெரிவித்துள்ளார்.
இப்போது தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதன் மூலம், தரைவழி கையாளுபவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் விமான நிறுவனங்களும், பறக்கும் திட்டங்களை அவற்றின் கிடைக்கக்கூடிய வளங்களுடன் சிறப்பாகப் பொருத்த உதவுகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடைகேட்விக் விமான நிலையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் எப்போது தங்கள் விமானங்களை ரத்து செய்யும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்கதக்து.