பவுண்டின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி - விடுமுறைக்குச் செல்லும் பிரித்தானியர்களுக்கு பாதிப்பு
அமெரிக்க டொலர் மற்றும் யூரோவிற்கு எதிராக பிரித்தானிய பவுண்டின் வீழ்ச்சி இந்த கோடையில் விடுமுறைக்கு வருபவர்களுக்கு மோசமான செய்தியை அளிப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக நேற்றைய தினம் டொலர் மற்றும் யூரோவிற்கு நிகராக பவுண்டின் வீழ்ச்சியடைந்துள்ளது. கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிகக் குறைந்த அளவு பவுண்டின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.
இதன் விளைவாக, அடுத்த சில வாரங்களில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரித்தானியர்கள் பாதிக்கப்படகூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய நாணயமாக மாறியுள்ள பவுண்ட்
இது குறித்து டச்சு வங்கியான ரபோபேங்கின் அந்நிய செலாவணி மூலோபாயத்தின் தலைவர் ஜேன் ஃபோலே கூறுகையில், "பவுண்ட் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாணயமாக இருப்பதாக கூறியுள்ளார்.
அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக மோதல் ஆகியவை பிரித்தானிய பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளை அதிகரிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
பவுண்டின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி விடுமுறைக்கு வருபவர்களுக்கு "இருட்டை சேர்க்கும்" எனவும் அவர்கள் ஏற்கனவே பயண இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, கோடை விடுமுறை காலம் மற்றும் நீண்ட பாடசாலை விடுமுறை காரணமாக பலர் தங்கள் முதல் வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடுகின்றனர்.
அமெரிக்க டொலர் மிகவும் வலுவானது
அவர்கள் அங்கு சென்றதும், அவர்கள் பையில் இருக்கும் பவுண்டுகள் அவ்வளவு தூரம் செல்லவில்லை என்பதைக் காணலாம். எனினும், நீங்கள் ஐரோப்பா பகுதி அல்லது அமெரிக்காவிற்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் குறைவாக வாங்க முடியும்," என்று ஜேன் ஃபோலே கூறியுள்ளார்.
"அமெரிக்க டொலர் மிகவும் வலுவானது, எனவே அமெரிக்காவிற்குச் விடுமுறைக்கு செல்பவர்கள் உண்மையில் பலவீனத்தைக் காணப் போகிறார்கள்." என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"ஸ்டெர்லிங் பவுண்ட் பல வருடங்களாக வீழ்ச்சியில் இருக்கின்றது, எனவே ஓரளவிற்கு இந்த பலவீனம் எதிர்பார்க்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.