கிளிநொச்சியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு (Photos)
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு - மயில்வாகனபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று சமையல் செய்து கொண்டிருக்கையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட பெண் திடீர் என சத்தம் கேட்டதையடுத்து வீட்டிலிருந்து வெளியில் ஒடி வந்ததாகவும், பின்னர் தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து அடுப்பின் ரேகுலொட்டர் அகற்றப்பட்டு பின்னர் தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அடுப்பு வெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் தடயவியல் பொலிஸாரும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.











அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
