பெண் ஒருவர் சமைத்துக்கொண்டிருந்த போது வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு
பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது வவுனியா நகரப்பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.
இன்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த பெண் எரிவாயு சிலிண்டர் அண்மைக்காலமாக வெடிப்பதால் அவதானமாகவும், முன் எச்சரிக்கையுடனும் இருந்தமையால் உடனடியாக அடுப்பை அணைத்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
குறித்த வெடிப்பின் போது எரிவாயு அடுப்பு உடைந்து சேதமாகியுள்ளது. இருப்பினும், வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ
இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார் இது தொடர்பில் தடயவியல் பொலிஸாரின்
உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




