எரிவாயு கசிவு : புத்திசாலிதனமாக செயற்பட்ட வீட்டு உரிமையாளர் (VIDEO)
வவுனியா பண்டாரிக்குளம் உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதுடன் வீட்டு உரிமையாளரின் முன் ஆயத்த நடவடிக்கையினால் வெடிப்புச் சம்பவம் மற்றும் சேதங்கள் என்பனவும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டு உரிமையாளரினால் எரிவாயுவை பரீட்சித்துப்பார்த்துப் பொருத்தும் நடவடிக்கையை மேற்கொண்டபோது அதில் கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குறித்த எரிவாயுவை பொருத்தும் நடவடிக்கையை கைவிட்டு 1311 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தி தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து கசிவு ஏற்படும் எரிவாயுயை கொடுத்து பிறிதொரு எரிவாயுவைக் கொள்வனவு செய்யுமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது வரையும் 850 இற்கும் மேற்பட்ட எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. எனினும் எவரும் முன் ஆயத்த நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றவில்லை இதனால் பல அனர்த்தங்கள் ஏற்பட்டு சில உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளது.
எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்குப் போதிய விழிப்புணர்வுகள் வழங்கப்படவில்லை.
இதனால் வெடிப்புச் சம்வங்கள் இடம்பெற்று வருகின்றது . எரிவாயு கொள்வனவு செய்யும் ஒருவர் அதனைப்பரீட்சித்துப் பார்த்து அடுப்பில் பொருத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கும்போது இடம்பெறவுள்ள அனர்த்தங்கள் சேதங்கள் இழப்புக்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

