சமையல் எரிவாயு பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீா்வு: லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர்
லிற்றோ சமையல் எாிவாயுப் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தொிவித்துள்ளார்.
தற்போதைய எரிவாயு தட்டுப்பாடுக்கு தொழில் மாபியா, வெளிச் சந்தை நிலவரங்கள் மற்றும் பொருளாதார நிலைமைகளே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல்.பி எரிவாயு ஏற்றிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தாலும் தடையின்றி எரிவாயு வழங்கப்பட வேண்டுமானால், எம்முடனான உடன்படிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர் நிறுவனம் கோரியது.
இந்தநிலையில் எரிவாயு தட்டுப்பாடு, தங்கள் நலனுக்காக சிலரால், வேண்டுமென்றே செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே நான் நம்புகிறேன்.
நிலைமை படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் சந்தையில் போதுமான அளவு எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
