எரிவாயு கொள்கலன் வெடிப்பு சாதாரணமானது! பெரிதாக அச்சப்பட வேண்டியதில்லை: வாசுதேவ
நாட்டில் தற்போது நடந்து வரும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு நிலைமை குறித்து பெரிதாக அச்சப்பட வேண்டியதில்லை எனவும், இதற்கு முன்னரும் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அச்சப்பட வேண்டியதில்லை. முன்னரும் இப்படியான வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. எதிர்காலத்தில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கும். ஆங்காங்கே இந்த சம்பவங்கள் நடக்கின்றன.
ஒரு வருடத்தில் கணக்கிட்டு பாருங்கள் எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கும் என்று? இது எரிவாயுவை பயன்படுத்துவதில் காணப்படும் முன்னேற்றம் குறைந்த நிலைமை.
எமது எரிவாயு விநியோகத்தில் குறைந்த முன்னேற்றமே உள்ளது. எரிவாயு கொள்கலன்களின் முற்றிலுமான பாதுகாப்பு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கேள்வி: தரமற்ற கொள்கலன்களை மக்களுக்கு வழங்கியதால், இந்த நிலைமை ஏற்பட்டதாக கூறுகின்றனர்?
பதில்: இல்லை, இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. அப்படியானால் ஏன் கடந்த காலத்திலும் வெடித்தன.
கேள்வி: எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பை காணமுடியும் அல்லவா?
பதில்: ஆமாம். எரிவாயு பயன்பாடு அதிகரிக்கும் போது வெடிப்புகள் அதிகரிக்கும்.
கேள்வி: தற்போது இதற்கான பொறுப்பை யார் ஏற்பது?
பதில்: விநியோகிக்கும் நிறுவனங்களுக்கே முழுமையான பொறுப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam