அமெரிக்க ஒத்துழைப்பின் தேவை குறித்து கனடாவின் நிலைப்பாடு
கனேடிய முன்னேற்றத்தில் அமெரிக்காவின் தேவைப்பாடு குறித்து கனேடிய ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், "கனடாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான சக்தி மற்றும் சுரங்கத் தொழிற்துறை உறவு வட அமெரிக்காவின் சக்திப் பாதுகாப்பு. பொருளாதார வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் மீள்திறம் ஆகியவற்றுக்கு இன்றியமையாதது.
இந்த இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து வீடுகளுக்கும் தொழிற்துறைக்கும் சக்தி வழங்கி படை வல்லமையைப் பலப்படுத்தத் தேவையான இன்றியமையாத வளங்களின் உறுதியான விநியோகத்தை வழங்குகின்றன.
பொருளாதார நகர்வுகள்
மின்சாரம், பொட்டாஷ், யுரேனியம் உட்பட்ட கனேடிய சக்தித்துறை ஏற்றுமதிகள் அமெரிக்காவின் சக்தி மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு இன்றியமையாத அதேவேளை, கிரஃபைட், ஜேர்மானியம் போன்ற இன்றியமையாத கனிமங்கள் சீன விநியோகச் சங்கிலிகளில் தங்கியிருப்பதைக் குறைக்க உதவுகின்றன.
கனேடிய சக்தி மற்றும் வளங்கள் மீது விதிக்கப்படும் எந்த வரியும் ஐக்கிய அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி குடும்பங்கள், விவசாயிகள், தொழிற்துறைகள் ஆகியவற்றுக்கான செலவுகளை அதிகரிப்பதுடன் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் தங்கியிருக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தும். கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் தொடர்ந்து ஒத்துழைப்பதன் மூலம் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாத்து.
வேலைவாய்ப்புக்களை உருவாக்கி உலக சக்தி வல்லர சொன்றாக அவற்றின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தலாம். இந்த ஒத்துழைப்பு சக்தித்துறைச் சுதந்திரம், பொருளாதார உறுதித்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அவசியமானது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |