நெருக்கடியில் சிக்கியுள்ள ரஷ்ய பொருளாதாரம்..!
ரஷ்யாவின் (Russia) பொருளாதார நிலைமை குறித்து அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தனது முக்கிய நோக்கங்களை அடைந்துள்ள போதிலும் நாட்டின் போர்க்கால பொருளாதார தாக்கம் மோசமடைந்து வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அண்மையில், உயர் பொருளாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சோகத்தில் புடின்....
கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான எதிர்ப்பை தொடங்கியதிலிருந்து, உக்ரைனை வீழ்த்துதல் மற்றும் அதன் பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கைகள் மீது அதிக கவனம் செலுத்தி வந்தது.

அதேவேளை, 2023 ஆம் ஆண்டில், நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து போர் நிலைமை மாறிவிட்டதாகத் தோன்றினாலும், போர், குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்று புடின் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன், உக்ரைனில் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ட்ரம்ப் கருத்து வெளியிட்ட போது, பொருளாதாரம் தோல்வியடைந்து வரும் ரஷ்யாவிற்கும் ஜனாதிபதி புடினுக்கும் நான் ஆதரவு வழங்குவேன. இப்போதே இந்த அபத்தமான போரை நிறுத்துங்கள். அது மோசமடையப் போகிறது என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக கடன் பெறும் செலவுகள், ஒரே நேரத்தில் தனியார் முதலீட்டைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக புடின் எண்ணுவதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri
பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam