புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (23) வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.
வெட்டுப்புள்ளிகள்
அதன்படி, அதிகபட்ச வெட்டுப்புள்ளி 143 ஆகவும், குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 130 ஆகவும் உள்ளது.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 141 ஆகவும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 143 ஆகவும் உள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 139 ஆக உள்ளது.
இதேவேளை மன்னார் மாவட்டத்தின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 138 ஆகவும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 130 ஆகவும் உள்ளது.
பரீட்சை
வவுனியா மாவட்டத்தின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 139 ஆகவும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 130 ஆகவும் உள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.
இதில் 244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.